/* */

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்

பாஜகவின் இரண்டாவது வெகுஜனத் தலைவராக ஆதித்யநாத் உருவெடுக்கிறாரா? காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக உருவெடுக்கிறதா ஆம் ஆத்மி?

HIGHLIGHTS

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்
X

மோடி-யோகி

நடந்து முடிந்த ஐந்துமாநில தேர்தலில் காங்கிரஸின் மகத்தான சரிவைக் காட்டிலும், பிஜேபி ஐந்து மாநிலங்களில் நான்கில் மகத்தான வெற்றி பெற்றதுதான் குறிப்பிடத்தக்கது

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தொற்றுநோய் மற்றும் விவசாயிகள் போராட்டத்தின் போது தவறான நிர்வாகம் ஆகியவற்றால் மக்கள் கோபமுற்றிருந்தனர். இதன் காரணமாக பாஜக அங்கு தோல்வியை சந்திக்கும் என எதிர்பார்த்த நிலையில் உ.பி.யில் பாஜக தனது வாக்கு சதவீதத்தை வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது. இருப்பினும் 2017ஆம் ஆண்டை விட இடங்களின் எண்ணிக்கை குறைவாக பெற்றுள்ளது.

எனவே, ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆதரவான வாக்கு என்று குறிப்பிடலாமா?

உண்மையில் மூன்று விஷயங்கள் பாஜகவுக்கு சாதகமாக வேலை செய்தன, குறிப்பாக உ.பி.யில்

ஒன்று, யோகி ஃபேக்டர் நன்றாக வேலை செய்தது, இப்போது மோடியைப் போல மாஸ் லீடர் என்று சொல்லக்கூடிய வேறு ஒரு தலைவர் பாஜகவுக்கு இருக்கிறார். அவரது பதவிக்காலம் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. CAA எதிர்ப்பு இயக்கம் மற்றும் பிற எதிர்ப்புக் குரல்களை இரக்கமற்ற முறையில் அவர் கையாண்ட விதம் அவரது ஆளுமைப் பண்பை கேள்விக்குறியாக்கியது. மற்ற பாஜக முதல்வர்களால் பின்பற்றப்பட்ட புதிய மாதிரி ஆட்சியை அவர் கொண்டு வந்தார். ஹிந்துத்துவா, அதிகாரத்தை அதீதமாக மையப்படுத்துதல், காவல்துறையின் அதீத பயன்பாடு, எதிர்க்கட்சிகளை பொருட்படுத்தாமல் இருப்பது மற்றும் சொந்தக் கட்சித் தலைவர்களைப் புறக்கணிப்பது ஆகியவை இந்த மாதிரியின் தனிச்சிறப்புகளாகும்.

இரண்டாவதாக, பிஜேபி தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்துள்ளது. 2014, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாஜக பெற்ற மண்டல் வாக்குகளை (யாதவர்களைத் தவிர) இழக்கும் என்ற வாதம் நடக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் பாஜக தனது ஓபிசி சமூக அடித்தளத்தைத் தக்க வைத்துக் கொண்டது. மேலும் உ.பி.யில் இன்று இந்துத்துவா வாக்குகள் முன்னெப்போதையும் விட ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதை இது காட்டுகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளில் பாஜக 40% வாக்குகளை பெற்றது இது நான்காவது முறை என்பதை மறந்துவிடகூடாது. இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

1989க்குப் பிறகு வேறு எந்தக் கட்சியும் இப்படிப்பட்ட வாக்குகளைப் பெற முடியவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் பெரும்பான்மை அரசாங்கங்களை அமைத்தபோதும் அவர்களின் வாக்கு சதவீதம் 30% தாண்டவில்லை..

மூன்றாவதாக, கொரோனா காலகட்டத்தில் பொதுநல நடவடிக்கைகள் மற்றும் ரேஷன் விநியோகம் ஆகியவை விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகளை மறக்கடித்தது. ஓபிசி மற்றும் தலித் வாக்காளர்களிடையே நலத்திட்டங்கள் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


பஞ்சாபில் ஆம் ஆத்மியின் வெற்றி அற்புதமானது. உண்மையில், அது ஆட்சியை பிடிக்க ஐந்து ஆண்டுகள் தாமதமானது. 2017ல், அது பஞ்சாபில் அரசாங்கத்தை அமைக்கும் என்று கணிக்கப்பட்டது, ஆனால் முடிவுகள் மிகவும் ஏமாற்றமளித்தன, மேலும் அது 20 இடங்கள் மற்றும் 22% வாக்குகளுடன் மட்டுமே பெற்றது.

ஆம் ஆத்மி இன்று இரண்டு மாநிலங்களை ஆளும் புதிய கட்சியாகும். ஆனால், பெரிய எதிர்க்கட்சியாக மாறி, காங்கிரசிற்கு மாற்றாக விளங்கப்போகிறது என தற்போது கூற இயலாது. ஏனென்றால், மற்ற இரண்டு மாநிலங்களான கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி சிறப்பாக செயல்படவில்லை, அங்கு அவர்களின் வெற்றி எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக உள்ளது.

இந்தத் தேர்தல்களில் ஐந்து மாநிலங்களில் இரண்டையாவது காங்கிரஸ் வென்றிருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்த உட்கட்சி பூசல் அதனை நடக்க விடாமல் செய்துவிட்டது.

ஆறு மாதங்களுக்கு முன்பு, பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களை காங்கிரஸ் தக்க வைத்துக் கொள்ளும் என்ற ஒரு பேச்சு அடிபட்டது, பஞ்சாபில் நவ்ஜோத் சித்துவை தலைவராக நியமித்தது ஒரு தவறு, இரண்டாவது, அவரது ராஜினாமாவை ஏற்காதாது மிகப்பெரிய தவறு. ஆனால் காங்கிரஸுக்கு அந்த உண்மை தெரியாமல் இருந்தது. இப்போது அதற்கான விலையை கொடுக்கிறது.


கோவாவில், பிஜேபி அரசுக்கு எதிரான ஆட்சிக்கு எதிரான அலை இருந்தாலும், கட்சித் தாவல்களால் கட்சி உடைந்து, ஆட்சிக்கு வருவதை சாத்தியமற்றதாக்கியது.

பஞ்சாபில் கேப்டன் அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. அவருக்கு பதிலாக சிஎஸ் சன்னியை நியமித்தது. நவ்ஜோத் சித்துவை கட்சியின் தலைவராக நியமித்தது. சித்து தன்னை ஒரு அணி வீரராக மட்டும் நிலைநிறுத்திக் கொண்டார். மறுபுறம், தலித் ஒருவரை முதலமைச்சராக்குவது நல்ல நடவடிக்கை. அறியப்படாத காரணங்களுக்காக, சன்னியின் வாய்ப்புகளைத் தகர்க்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்த சித்துவை தடுத்து நிறுத்த காங்கிரஸுக்கு தைரியமோ நம்பிக்கையோ இல்லை.

இதேபோல், உத்தரகாண்டிலும், ஹரிஷ் ராவத்துக்கு சுதந்திரம் கொடுக்க கட்சி தயாராக இல்லை. பஞ்சாப்பைப் போலவே, உத்தரகாண்டிலும் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுடன் சண்டையிடுவதை விட தங்களுக்குள் சண்டை நடத்தினர். மூன்று மாதங்களில் இரண்டு முதல்வர்களை மாற்றி பாஜக மாற்றிய போதே காங்கிரஸ் அங்கு வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் இருந்ததாக தெரிந்தது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்று ஒருமித்த கருத்து நிலவியது. ஆனால் பாஜகவை வெற்றி பெற வைக்க காங்கிரஸ் கடுமையாக உழைத்தது.

கோவாவில், சந்தேகத்திற்கு இடமின்றி, காங்கிரஸ் பலவீனமான நிலையில் இருந்தது, ஆனால் பாஜக அரசாங்கத்தின் மீதான கோபத்தை தனக்கு சாதகமாக மாற்றுவதற்கான உத்தி எதுவும் இல்லை என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. பாஜக தனது தலைசிறந்த மற்றும் மக்களை கவரும் சக்தி வாய்ந்த தலைவரான மனோகர் பாரிக்கரை இழந்துவிட்டது என்பதை மறந்துவிடக் கூடாது. பிரச்சாரம் முழுவதும் கட்சி மந்தமாகவே இருந்தது. ஆனால் காங்கிரஸுக்கு புதிய முயற்சிகளை செய்து பார்க்கவும், புதுமையை புகுத்தவும் ஆற்றலோ ஆர்வமோ இல்லை.

Live Updates

  • 11 March 2022 5:10 AM GMT

    ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்

Updated On: 11 March 2022 5:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...