இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக நடிகர் மாதவன்
இந்தியத் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த நடிகர் மாதவன், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராகவும் , நிர்வாகக் குழுவின் தலைவராகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் . மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் X தளத்தில் (முன்னர் ட்விட்டர்) அதை அறிவித்து, தேசிய விருது பெற்ற நடிகருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
"FTIIஇன் தலைவராகவும், ஆளும் குழுவின் தலைவராகவும் பரிந்துரைக்கப்பட்ட @நடிகர் மாதவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பரந்த அனுபவமும் வலுவான நெறிமுறைகளும் இந்த நிறுவனத்தை வளப்படுத்தும், நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்து, மேலும் உயர் நிலைக்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன். உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்" என்று தாக்கூர் தெரிவித்துள்ளார்
நடிகர் மாதவன் நடித்த 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் சமீபத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கதை சொல்லுவதில் மாஸ்டர் என நடிகர் மாதவன் புகழ்ந்து தள்ளியிருந்தார். ”ஒரு கதையை சொல்வதில் மாஸ்டராக இருக்கும் விவேக் அக்னிஹோத்ரி இந்த கதையை இயக்கியுள்ளார். அவரால் ஒரே நேரத்தில் உங்களை உற்சாகப்படுத்தவும், கைத்தட்டவும், அழ வைக்கவும் முடியும்” என கூறியிருந்தார்
பிரபல பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வந்தது. அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் என பலர் நடித்த தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
1990களில் காஷ்மீரில் இருந்த பண்டிட்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே ஏற்பட்ட மோதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில், பண்டிட்கள் காஷ்மீரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
கோவாவில் நடந்த 53அது சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளியிடப்பட்டது. அப்போது, இந்த படம் வெறுப்புணர்வை தூண்டுவதாக விழாவின் தேர்வுக்குழு தலைவர் கூறியது சர்ச்சையானது. எனினும், வட இந்தியாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த வாரம் நடைபெற்ற 69வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியலில் தேசிய ஒருமைப்பாட்டை கூறும் படமாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் இருப்பதாக கூறி, சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu