எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல் வேதனை அளிக்கிறது: வெங்கையா நாயுடு கண்ணீர்
ராஜ்ய சபா தலைவர் வெங்கையா நாயுடு ராஜ்யசபாவில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு அதிருப்தி தெரிவித்தார்
கடந்த ஜூலை 19 பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது. அப்போது முதல், பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை சபை கூடியதும் விவசாய சட்டங்களை வாபஸ் வாங்கக்கோரி, ராஜ்யசபாவில் அதிகாரிகளின் வட்ட வடிவ மேஜை மீது எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஏறி நின்று அமளியில் ஈடுபட்டனர். அவை தலைவர் வெங்கையா நாயுடு பல முறை வற்புறுத்தியும் அடங்க மறுத்தனர்.
இன்று மாநிலங்களவையில் பெகாசஸ் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் முழக்கங்களை எழுப்பினர்.அமளிக்கு மத்தியில் பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில், ஆனால் சில மாநிலங்களவை உறுப்பினர் நேற்று மேஜை மேல் ஏறியதன் காரணமாக அதன் அனைத்து புனிதமும் அழிக்கப்பட்டது என்று வேதனை தெரிவித்தார்.
இதனால் நேற்று இரவு என்னால் உறங்கக் கூட முடியவில்லை என்றும் இது போன்ற அவையை நடத்த தாம் விரும்பவில்லை என்றும் வெங்கையா நாயுடு கண்ணீர் மல்கபேசினார். மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இத்தகைய செயல்களை கண்டிப்பதாகவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu