திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் அனுமதி

திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் அனுமதி
X

அச்சுதானந்தன்

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன், உடல் நலக்குறைவால் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவரும் முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன், 98, அரசியல் இருந்து ஒதுங்கி ஓய்வில் உள்ளார். திருவனந்தபுரத்தில் தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் , திருவனந்தபுரம் அருகே பட்டோம் பகுதி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அச்சுதானந்தன், அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சுதானந்தனுக்கு இரைப்பை குடல் அழற்சி மற்றும் சிறுநீரக கோளாறுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!