விமானப்படை அபிநந்தனுக்கு குரூப் கேப்டன் பதவி உயர்வு

விமானப்படை அபிநந்தனுக்கு குரூப் கேப்டன் பதவி உயர்வு
X

அபிநந்தன் வர்தமான் 

பாலகோட் தாக்குதலில் பாக்., விமானத்தை சுட்டு வீழ்த்திய உதவி கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு, குரூப் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கைபர் பக்துன்க்வா பகுதியின் பயங்கரவாதிகள் முகாம் மீது, இந்திய படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர்.

அப்போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாக்., ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இதில் பாலகோட் பகுதியில் பாக்., ராணுவ விமானத்தை அபிநந்தனின் மிக் 21 போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. பாக். தரப்பு தாக்குதலில் அவரது விமானம் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்தது. அதில் உயிர் தப்பிய அவரை அந்நாட்டு ராணுவம் கைது செய்தது.

சர்வதேச தலையீடு மற்றும் இந்திய அரசின் அழுத்தம் காரணமாக அபிநந்தனை பாக்., ராணுவம் விடுவித்தது. மிகப்பெரிய வரவேற்புடன் நாடு திரும்பிய அவருக்கு, சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் அபிநந்தனுக்கு விமானப்படையின் குரூப் கேப்டன் பதவி உயர்வு தற்போது வழங்கப்பட்டு உள்ளது. சில நாட்களில் அவர் புதிய பொறுப்பை ஏற்பார் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags

Next Story