அரசு சலுகைகளை பெற இனி ஆதார் கட்டாயம்: ஆதார் ஆணையம்

அரசு சலுகைகளை பெற இனி ஆதார் கட்டாயம்: ஆதார் ஆணையம்
X
மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் சேவைகளை பெற இனி ஆதார் எண் கட்டாயம் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி இந்திய ஆதார் ஆணையம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது.

அந்த சுற்றறிக்கையில், மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களின் கீழ் மானியங்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம். ஆதார் வழங்கப்படாத சூழலில் நிரந்தர ஆதார் அட்டை பெறும்வரை, ஆதார் பதிவு செய்த எண்ணெய் பயன்படுத்தி சேவைகளை பெறலாம்.

ஆதார் எண் அல்லது அது பதிவு சீட்டு இல்லை என்றால் அரசாங்க மானியங்கள் மற்றும் பலன்களை பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தற்போது ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் UIDAI தெரிவித்துள்ளது.

முன்னதாக ஆதார் இல்லாத நபர்கள் அரசின் மற்ற அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க ஆதார் சட்டத்தின் 7வது பிரிவில் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு இனி அரசின் அனைத்து விதமான சலுகைகளை பெறவும் ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture