ஆடி காரில் வந்து டீ விற்கும் இளைஞர்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஆடி காரில் வந்து டீ விற்கும் இளைஞர்: இணையத்தில் வைரலாகும் வீடியோ
X

பைல் படம்.

மும்பையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஆடி காரில் வந்து டீ கடை போட்டு விற்பனை செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் அதிக மக்களால் விரும்பி பருகப்படும் பானம் என்றால் அது டீ, காபிதான். காரணம் இது சோர்வினை கலைத்து புத்துணர்ச்சியை வழங்கும் அரும்பானமாக இருப்பதால் தான். அப்படிப்பட்ட டீ, காபியை பெரும்பாலானோர் தங்கள் வீட்டிலேயே செய்து பருகினாலும், டீ கடைக்கு சென்று அருந்துவதிலும் பலருக்கு அலாதி பிரியம் உண்டு. இதன் காரணமாகத்தான் இந்தியா முழுவதும் தெருக்கு தெரு, சந்துக்கு, சந்து டீ கடைகள் இயங்கி வரும் நிலையில், தற்போது மும்பையை சேர்ந்த இரு இளைஞர்கள் சொகுசு காரான ஆடி காரில் வந்து டீ கடை போட்டு விற்பனை செய்யும் விடியோவானது இணையத்தில் வைரலாகி உள்ளது.

அமித் காஷ்யப் மற்றும் மண்ணுசர்மா என்ற அந்த இரு இளைஞர்களும், மும்பையில் உள்ள லோகந்த்வாலா சாலைக்கு தினமும் வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆடி காரை நிறுத்தி, பின்னர் கார் டிக்கியை திறந்து, தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து, ஸ்டால் அமைத்து இந்த டீ கடை வியாபாரத்தை செய்து வருகின்றனர். இவ்வாறு இவர்கள் விற்பனை செய்யும் இந்த விடியோவானது தற்போது இன்ஸ்ட்ராகிராமில் வைரலாக பரவி வருவதோடு, இந்த வீடியோவை பார்த்த இணைய வாசிகளும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!