கேரளாவில் பயணிகள் ரயிலுக்கு இன்று அதிகாலை தீ வைப்பு
தீவைத்து எரிக்கப்பட்ட ரயில் பெட்டி.
கேரள மாநிலம், கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலுக்கு மர்ம நபர் ஒருவர் தீவைத்ததில் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த ரயிலின் ஒரு பெட்டிக்கு தீவைத்த நிலையில், மற்ற பெட்டிகள் உடனடியாக கழற்றிவிடப்பட்டன. இதில் ரயிலின் ஒரு போகி எரிந்து சேதமானது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடந்த இந்த தீவிபத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நேற்று இரவு 11 மணிக்கு 8-வது யார்டில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதே ரயிலில் ஏப்ரல் 2-ம் தேதி தீவைக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், இது தீக்குளிப்பு வழக்காக இருக்கலாம். 3 தீயணைப்பு படை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர், இருப்பினும் பெட்டி முற்றிலும் எரிந்து நாசமானது. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி கோழிக்கோடு எலத்தூர் அருகே இதே எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் டி1 பெட்டியில் நடந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்; 9 பேர் தீக்காயம் அடைந்தனர்.
முக்கிய குற்றவாளியான ஷாருக் சைஃபி கைது செய்யப்பட்ட வழக்கை என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், கண்ணூரில் அதே ரயிலுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தீ வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் விபத்தாக கருதப்படுகிறது. சிஆர்பிஎப் உள்ளிட்டோர் அந்த இடத்தில் முகாமிட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu