கடந்த 24 மணி நேரத்தில் 34 லட்சம் டோஸ்களுடன் 9.80 கோடியைத் கடந்தது

கடந்த 24 மணி நேரத்தில் 34 லட்சம் டோஸ்களுடன் 9.80 கோடியைத் கடந்தது
X

இந்தியாவில் இதுவரை வழங்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசியின் எண்ணிக்கை இன்று 9.80 கோடியைக் கடந்தது.

இன்று காலை 7 மணி வரை, 14,75,410 முகாம்களில்‌ 9,80,75,160 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 34 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

84-வது நாளான நேற்று (ஏப்ரல் 09, 2021) நாடு முழுவதும் 34,15,055 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 38,93,288 டோஸ்கள் வழங்கப்பட்டு, தினசரி செலுத்தப்படும் தடுப்பூசியின் எண்ணிக்கையில் சர்வதேச அளவில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,45,384 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு, மகாராஷ்டிரா, சத்திஸ்கர், உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 82.82 விழுக்காடு பதிவாகியுள்ளது.அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 58,993 பேரும், சத்திஸ்கரில் 11,447 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 9,587 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 10,46,631 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 7.93 சதவீதமாகும்.நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,19,90,859 ஆக (90.80%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 77,567 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 794 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!