குண்டூரில் 8 வயது சிறுவனுக்கு குரங்கு அம்மை அறிகுறி

குண்டூரில் 8 வயது சிறுவனுக்கு குரங்கு அம்மை அறிகுறி
X
ஆந்திர மாநிலம் குண்டூரில் 8 வயது சிறுவனுக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சனிக்கிழமை எட்டு வயது சிறுவன் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் நிலவியது. குரங்கு அம்மை அறிகுறிகளுடன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

ஒடிசாவைச் சேர்ந்த அந்த சிறுவன் 15 நாட்களுக்கு முன்பு ஆந்திராவுக்கு வந்தான். ஒரு வாரம் கழித்து, சிறுவனுக்கு காய்ச்சல் மற்றும் சொறி ஏற்பட்டது. மருத்துவமனை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன் குமார் கூறுகையில், சிறுவனுக்கு சொறி மற்றும் குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதாக உள்ளூர் பொது சுகாதாரத் துறை கண்டறிந்தது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். மாதிரிகள் சேகரிக்கப்பட்டு என்ஐவி புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. என்று கூறினார்.

இதுவரை, இந்தியாவில் குரங்கு அம்மை நான்கு பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அதில் மூன்று பாதிப்பு கேரளாவிலும், ஒருவர் டெல்லியிலிம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கல்லீரல் பாதுகாக்க சில வழிகளை காணலாமா..? அப்போ இதோ உங்களுக்கான குறிப்பு..!