8-year-old Arshia Goswami deadlifts 60 kg like a pro- எட்டு வயதில் ‘சிங்கப் பெண்’ ஆக சாதித்த சிறுமி; வைரலாகும் வீடியோ

8-year-old Arshia Goswami deadlifts 60 kg like a pro- எட்டு வயதில், அறுபது கிலோ எடையை தூக்கி அசத்திய ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி அர்ஷியா.
8-year-old Arshia Goswami deadlifts 60 kg like a pro, video goes viral, Arshia Goswami, an eight-year-old girl from Panchkula, - 8வயது சிறுமி அர்ஷியா கோஸ்வாமி 60 கிலோ எடையை ப்ரோ போல் தூக்கிய வீடியோ, தற்போது வைரலாக பரவி வருகிறது.
வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. அப்படியே லட்சியத்தை கொள்கையாக வைத்திருப்பவர்களை எல்லாம் நினைத்ததை சாதித்து விட இந்த வாழ்க்கையும் எளிதில் விட்டுவிடுவது இல்லை. மனிதர்களின் வெற்றிக்கு மனிதர்களே தடையாக இருந்து விடுகின்றனர். சிலரது வெற்றிக்கு அவரவர் மனங்களே சாதிக்க தடையாக இருந்து விடுகிறது. இலக்கை நோக்கி பயணிக்க விரும்பும் பலரும், வெவ்வேறு திசைகளில் பயணிக்க வேண்டிய சூழலை, காலமே தீர்மானித்து விடுகிறது. சாதிப்பதே வாழ்க்கை என்று நினைக்கும் பலரும், ஒரு கட்டத்தில், எப்படியாவது வாழ்ந்துவிட்டால் போதும், அதுவே சாதனைதான் என நினைக்கும் அளவுக்கு வாழ்க்கை சோதனைகள் அவர்களை, முடங்கி போகச் செய்கின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஆண்களே போராட தயங்கும் காலகட்டத்தில், பெண்கள் சாதித்து காட்டுவது, பெருமைக்குரியதாக இருக்கிறது.
அதுவும் எட்டு வயது சிறுமி, 60 கிலோ எடையை தூக்கி, ‘சிங்கப்பெண்’ணாக சாதித்து காட்டி இருக்கிறார்.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவைச் சேர்ந்த அர்ஷியா கோஸ்வாமி என்ற எட்டு வயது சிறுமி, பளுதூக்கும் உலகில் தனது அபாரமான வலிமையாலும் உறுதியாலும் சாதித்து காட்டியுள்ளார். அவரது அசாத்திய திறமையை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது. இது, பார்வையாளர்களையும் நிபுணர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி .உள்ளது.
இந்த காட்சிகளில், அர்ஷியா, 60 கிலோ எடையை சிரமமின்றி தூக்குகிறார். அவரது அசாதாரணமான வலிமை, நுட்பம் மற்றும் அசைக்க முடியாத கவனம் ஆகியவற்றை இந்த காட்சிகள் நிரூபிக்கின்றன. அர்ஷியாவின் வீடியோ பலருக்கு ஒரு உத்வேகமாக மாறி வருகிறது. சாதிப்பதற்கு உடல் வலிமை தேவையில்லை.. மன வலிமை இருந்தால் எவ்வளவு பெரிய செயலையும் எளிதாக செய்து விடலாம் என்பற்கு அர்ஸியா என்கிற 8 வயது சிறுமி தான் வாழும் சாட்சியாக தெரிவதாக பலரும், கமெண்ட்டில் கூறி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணைய தளங்களில் தற்போது இந்த சிறுமியின் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் மிக அநாயசமாக 60 கிலோ எடையை தூக்குகிறார். இந்த வீடியோவை பார்த்து வியக்காதவர்களே இல்லை எனலாம். யார் அந்த சிறுமி? என தேடத் தொடங்கிருக்கின்றனர் தொழில் முறை பளு தூக்கும் வீரர்கள்.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்தவர் அர்ஷியா கோஸ்வாமி. 8 வயதாகும் இந்த சிறுமி ஒலிம்பிக் பொட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வத்துடன் பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பதிவு தான் இப்போது சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அதில் 60 கிலோ எடையை அர்ஷியா அலட்சியமாக தூக்கி ஒரு சில விநாடிகள் வைத்திருந்து விட்டு பின் கீழே வைக்கிறார். எடையை தூக்கிவிட்டு கம்பீரமாக நம்பிக்கையுடன் கேமராவை பார்த்து நடந்து வருகிறார் அந்த சிறுமி.
இந்த வீடியோவை இதுவரை இரண்டரை லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதோடு 19ஆயிரம் பேருக்கு மேல் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். சாதிக்க வயது ஒரு பொருட்டல்ல, எட்டு வயதிலும் தன்னை இந்த உலகம் வியந்து பார்க்க செய்திருக்கிறார் சிறுமி அர்ஷியா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu