7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: லடாக்கில் அதிர்ச்சி சம்பவம்

7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: லடாக்கில் அதிர்ச்சி சம்பவம்
X
லடாக்கில் சுமார் 60 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

லடாக்கில் சுமார் 60 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 26 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


லடாக்கின் துர்டுக் செக்டார், பார்தாபூர் முகாமிலிருந்து ராணுவ வீரர்கள் சப் செக்டர் ஹனிஃபில் உள்ள ஒரு இடத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது ராணுவ வாகனம் நிலைதடுமாறி சாலையில் சறுக்கி சுமார் 50-60 அடி ஆழத்தில் உள்ள ஷியோக் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 7 வீரர்கள் உயிரிழந்ததாகவும், மீதமுள்ள ராணுவ வீரர்கள் ராணுவ கள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப்பணியில் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையும் ஈடுபட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!