மும்பை கோரேகானில் 7 மாடி கட்டிடத்தில் தீ விபத்து. 6 பேர் உயிரிழப்பு

மும்பை கோரேகானில் 7 மாடி கட்டிடத்தில் தீ விபத்து. 6 பேர் உயிரிழப்பு
X

தீவிபத்தில் சேதமான கட்டடம் 

மும்பையின் கோரேகானில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர்.

கோரேகான் மேற்கு ஆசாத் நகர் பகுதியில் உள்ள ஜெய் பவானி கட்டிடத்தில் அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது என்று பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) தெரிவித்துள்ளது. காயமடைந்த குடியிருப்பாளர்கள் ஜோகேஸ்வரி மற்றும் ஜூஹுவில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தீ விபத்தில் பலியான 6 பேரில் இருவர் சிறார்கள். ஒரு ஆண் மற்றும் 5 பெண்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 40 பேரில், ஒரு சிறார் உட்பட 12 பேர் ஆண்கள், 28 பேர் பெண்கள், காயமடைந்தவர்கள் மும்பையில் உள்ள HBT மருத்துவமனை மற்றும் கூப்பர் மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் X இல் பதிவிட்டதாவது: மும்பையின் கோரேகானில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் இழப்புகள் குறித்து அறிந்து வேதனை அடைந்தோம். நாங்கள் பிஎம்சி மற்றும் மும்பை போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று எழுதினார்.

தீ அனைத்து பக்கங்களிலும் இருந்து பரவியதால், கட்டடம் முழுவதும் தீ பரவியது. கடைகள், பழைய பொருட்கள், கார்கள் மற்றும் தரை தளத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் எரிந்தன.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story