7 கோடி மதிப்பிலான ஹெராயின், 69.44 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்: இருவர் கைது
உகாண்டாவில் இருந்து சென்னைக்கு 2022 ஜனவரி 20 அன்று அதிகாலை 3 மணிக்கு ஏர் ஃபிளைட் அரேபியா மூலம் வந்திறங்கிய ஜூடித் டிவினாம்வெபெம்பெசி (29), சென்னை சுங்கத்துறையின் விமான நிலைய உளவு அதிகாரிகளால் பயணிகளின் விவர சேகரிப்புக்காக தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவரைச் சோதனை செய்து பார்த்தபோது, அவரது உள்ளாடைகளுக்குள் 108 கேப்சூல் வடிவ மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றில் 1.07 கிலோ எடையிலான சுமார் ரூ 7 கோடி மதிப்பிலான ஹெராயின் இருந்தது. தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985 மற்றும் சுங்க சட்டம் 1962-ன் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
துபாயில் இருந்து சென்னைக்கு 2020 ஜனவரி 20 அன்று எமிரேட்ஸ் விமானம் மூலம் வந்திறங்கிய ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டியன் பட்டிணத்தை சேர்ந்த திரு முகமது ஆசிக் சென்னை சுங்கத்துறையின் விமான நிலைய உளவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவரைச் சோதனை செய்து பார்த்தபோது, 1.52 கிலோ 24 கேரட் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு சுங்க சட்டம் 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ 69.44 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து மேலும் விசராணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே.ஆர்.உதய்பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu