புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை 68-வது தேசிய ரயில்வே விருது வழங்கல்
பைல் படம்
புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை 68-வது தேசிய ரயில்வே விருதுகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்குகிறார்.
ரயில்வே ஊழியர்களிடையே சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்ததற்காக சிறப்பாக செயல்படும் ரயில்வே ஊழியர்களுக்கு விருது / கேடயங்களை வழங்குவார். குறிப்பிட்ட துறையில் சிறந்த செயல்திறனுக்காக மண்டல ரயில்வே / பொதுத்துறை நிறுவனங்களுக்கு கேடயங்கள் வழங்கவுள்ளார்.
ரயில்வே, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் ராவ்சாகேப் பாட்டீல் தன்வே, ரயில்வே, ஜவுளித் துறை இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். ரயில்வே வாரியத்தின் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி, உறுப்பினர்கள், அனைத்து மண்டல ரயில்வேகளின் பொது மேலாளர்கள், ரயில்வேயின் உற்பத்தி பிரிவுகள், ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மண்டல ரயில்வே, உற்பத்தி பிரிவுகள் மற்றும் ரயில்வே பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த 100 ரயில்வே ஊழியர்களுக்கு அவர்களின் சிறந்த சேவைகளுக்காக 21 கேடயங்களுடன் விருதுகள் வழங்கப்படும். 16.04.1853 அன்று இந்தியாவில் முதல் ரயில் இயக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 10 முதல் 16 வரை ரயில்வே வாரம் கொண்டாடப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu