18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு மாதவிடாய், மகப்பேறு விடுப்பு
18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர் பிந்து வியாழக்கிழமை அறிவித்துள்ளார். CUSAT (Cochin University of Science and Technology) சனிக்கிழமை (ஜனவரி 14) அதன் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதாக அறிவித்தது.
"மாதவிடாய் காலங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் மன மற்றும் உடல் ரீதியான சிரமங்களைக் கருத்தில் கொண்டு, கேரள அரசு மாநில உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது" என்று பிந்து தனது அலுவலகத்தில் இருந்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
எஸ்எப்ஐ தலைமையிலான மாணவர் சங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் CUSATடில் மாதவிடாய் விடுப்பு அமல்படுத்தப்பட்டது.
பெண் மாணவர்களுக்கு "மாதவிடாய் நன்மைகள்" கோரிக்கையின் பேரில், ஒவ்வொரு செமஸ்டரிலும் பெண் மாணவர்களுக்கு வருகைப் பற்றாக்குறைக்கு 2 சதவீத கூடுதல் மன்னிப்பை CUSAT சனிக்கிழமை அறிவித்தது.
வழக்கமாக, மொத்த வேலை நாட்களில் 75 சதவீத வருகைப் பதிவு உள்ள மாணவர்கள் மட்டுமே ஒவ்வொரு செமஸ்டர் தேர்வுக்கும் எழுத அனுமதிக்கப்படுவார்கள். வருகைப்பற்றாக்குறைக்கு இரண்டு சதவிகிதம் மன்னிப்பு அளிக்கும் மாதவிடாய் விடுப்பில், பெண் மாணவர்களின் கட்டாய வருகை 73 சதவிகிதமாகக் குறைக்கப்படும்.
குசாட் மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளின் முன்மொழிவு சமீபத்தில் துணைவேந்தரிடம் முறையாக சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu