அக்னிபாத் திட்டத்தில் சேர 56960 பேர் விண்ணப்பம்

அக்னிபாத் திட்டத்தில் சேர 56960 பேர் விண்ணப்பம்
X

பைல் படம்.

Today News Paper Tamil Job Vacancy - விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 5-ந்தேதி கடைசி நாளாகும். ஆன்லைன் தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும்.

Today News Paper Tamil Job Vacancy - முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் 'அக்னிபாத்' திட்டத்தை மத்திய அரசு கடந்த 14-ந்தேதி அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களை சேர்க்கும் பணிகளில் முப்படைகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 24-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் மொத்தம் 56,960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த தகவல் இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 5-ந்தேதி கடைசி நாளாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careerindianairforce.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களைளுக்கு ஆன்லைன் தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும் என்றும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story