பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தில் இதுவரை 114 லட்சம் வீடுகளுக்கு அனுமதி
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் அனுமதிக்கப்பட்ட 114 லட்சம் வீடுகளில் 89.36 லட்சம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 52.55 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன
அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்துடன் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் 25.06.2015 முதல் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்-நகர்ப்புறம் (PMAY-U) என்ற திட்டத்தை செயல்படுத்திவருகிறது.
மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பித்த திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், அவர்களின் மதிப்பிடப்பட்ட வீடுகளின் தேவைக்கேற்ப, இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 114 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கப்பட வீடுகளில் 89.36 லட்சம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 52.55 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் 31.03.2022 வரை செயல்படுத்தப்படும். அனைத்து வீடுகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் வகையில், அனுமதிக்கப்பட்ட வீடுகளின் கட்டுமானத்தை விரைவுபடுத்துமாறு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காக 2017-18, 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசின் உதவித் தொகையாக ரூ. 87,698 கோடி அளிக்கப்பட்டுள்ளது.; இதில் ரூ. 80,475 கோடியை மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் பயன்படுத்தியுள்ளன.
இத்தகவலை, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் கவுசல் கிஷோர் இன்று மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu