5 மாநில தேர்தல்: இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.1760 கோடி

5 மாநில தேர்தல்: இதுவரை  பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.1760 கோடி
தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.1760 கோடி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கொண்டு செல்லப்பட்ட 1760 கோடி ரூபாய் பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக தற்போது ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ,தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவு நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் 5 சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடுவதற்கு மத்திய ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

இதில் மிகப்பெரிய மாநிலங்களான ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சியும், மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சியும் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலங்களில் இந்த இரண்டு கட்சிகளும் ஆட்சியை தக்க வைப்பதற்கும், புதிதாக அமைப்பதற்கும் தீவிரம் வாட்டி வருகின்றன. ஐந்து மாநில தேர்தல்களை பொறுத்தவரை சத்தீஸ்கரில் மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று உள்ளது. மற்ற மாநிலங்களில் நவம்பர்17 ல்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வருகிற 30-ஆம் தேதி அடுத்த கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்தமாக டிசம்பர் 3ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களின் பணப்பழக்கம் அதிகமாக இருந்ததால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன் விளைவாக இதுவரை இந்த ஐந்து மாநிலங்களிலும் 1760 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் தெலுங்கானாவில் மட்டும் அதிகபட்சமாக 614 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story