பெங்களுருவில் ரூபாய் 5 கோடி போதைப்பொருள் பறிமுதல்
பெங்களுருவில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்
கர்நாடக மாநில காவல்துறையின் வரலாற்றில் முதல்முறையாக 15 கிலோ ஹாஷிஷ் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சக்கரம் என்பவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் பெங்களூரு நகரில் ஹென்னூர் காவல் நிலைய பகுதியில் உள்ள எலைட் அஷ்வினி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து மூன்று ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் போதைப்பொருட்களை விற்பனை மற்றும் சப்ளை செய்வதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில் 2 நண்பர்களுடன், பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அவர் போதைப்பொருள், ஹஷிஷ் எண்ணெய் மற்றும் மரிஜுவானா ஆகியவற்றை விற்பனை செய்தது வந்துள்ளார்.
பெங்களூரு சிட்டியில் முதன்முறையாக 15 கிலோ ஹஷிஷ் எண்ணெய், 11 கிலோ மரிஜுவானா, 530 கிராம் சரஸ்முண்டி, 4 ஹைட்ரோ மரிஜுவானா மரங்களை ஒரே நேரத்தில் விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கொண்ட தனி படையினர், இன்று மர்ம கும்பல் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவரது வீட்டில் 4 ஹைட்ரோ மரிஜுவானா மரக்கன்றுகள் மற்றும் மொபைல் போன்கள், கார்கள், பைக்குகள் மற்றும் போதைப்பொருட்களை எடைபோட பயன்படுத்தப்படும். தராசு இயந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu