உடான் திட்டத்தின் கீழ் 405 விமான வழித்தடங்கள்

சென்னை விமான நிலையம்.
சிறிய நகரங்களுக்கும் விமான சேவையை விரிவுபடுத்தும் பிராந்திய இணைப்புத் திட்டமான உடான் திட்டத்தின் கீழ், 405 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படுவதாக மத்திய விமானப்போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், மொத்தம் 948 வழித்தடங்களில் விமானங்களை இயக்க, இந்தியா விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி அளித்திருப்பதாக கூறியுள்ளார். இதில், 9, மார்ச் 2022 நிலவரப்படி, 8 ஹெலிகாப்டர் தளங்கள் உட்பட 65 விமான நிலையங்கள் மற்றும் 2 நீர்நிலை விமான நிலையங்களை (water Aerodromes) உள்ளடக்கி மொத்தம் 405 வழித்தடங்களில் விமான சேவை நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ், 14 நீர்நிலை விமானதளங்கள், 36 ஹெலிபேட் உட்பட 154 விமான நிலையங்கள், உடான் திட்டத்தின் கீழ் விமான சேவைகளை தொடங்க தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், ஜெனரல் வி கே சிங் தெரிவித்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu