10 வயதுடையவர்களில் 37.8 சதவீதம் பேருக்கு பேஸ்புக் கணக்கு-என்சிபிசிஆர்
10 வயதுடையவர்களில் 37.8 சதவீதம் பேருக்கு பேஸ்புக் கணக்கு இருக்குது- தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்)
ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் இணையம் மூலம் பிற சாதனங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறிச்சு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்திச்சு. அதுலே, 'ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளில் 59.2 சதவீத குழந்தைகள் மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்துறாய்ங்க. 10.1 சதவீத குழந்தைகள் மட்டுமே ஆன்லைன் கற்றல் மற்றும் கல்விக்காக செல்போனை யூஸ் செய்யறாய்ங்க கிட்டதிட்ட 8 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 30.2 சதவீதம் குழந்தைகள் தனித்தனியாக ஸ்மார்ட்போன் வைச்சிருக்காய்ங்க.
அவர்களில் 10 வயதுடையவர்களில் 37.8 சதவீதம் பேருக்கு பேஸ்புக் கணக்கு இருக்குது. அதே வயதில் 24.3% பேர் இன்ஸ்டாகிராமில் கணக்கை வைச்சிருக்காய்ங்க . 13 வயசுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தனித்தனி ஸ்மார்ட்போன்கள் அதிகம் வைச்சிருக்காங்க. இருப்பினும், லேப்டாப் மற்றும் டேப்லெட்களைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு லேப்டாப்பை விட தனியாக ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொடுக்க விரும்புறாய்ங்க- அப்படீன்னு தெரிய வந்துருக்குது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu