பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டை: 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்
கோப்புப்படம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அம்மாவட்டத்தின் ஹலன் பகுதியில் நேற்று இரவு ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் ஒரு ட்வீட்டில், “குல்காமில் உள்ள ஹலானின் உயரமான பகுதிகளில் பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
"பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை என்கவுண்டராக மாறியது. இந்த என்கவுன்டரில், மூன்று ராணுவ வீரர்களுக்கு புல்லட் காயம் ஏற்பட்டது, பின்னர் அவர்கள் காயங்களுடன் உயிரிழந்தனர். அப்பகுதியில் தேடுதல் பணி நடந்து வருகிறது." என கூறியுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu