கடந்த ஆண்டில் 294 பெண்களுக்கு வணிக விமான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கல்

பைல் படம்.
2023 ம் ஆண்டில், பெண்களுக்கு 294 வணிக விமான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன. இது வழங்கப்பட்ட மொத்த வணிக விமான ஓட்டுநர் உரிமங்களில் 18 சதவீதம் ஆகும்.
இந்தியாவில் பெண் விமானிகளின் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2023-ம் ஆண்டில், வழங்கப்பட்ட மொத்த வணிக விமான ஓட்டுநர் உரிமங்களின் எண்ணிக்கை 1622 ஆகும். இதில் 294 உரிமங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டன. இது வழங்கப்பட்ட மொத்த வணிக விமான ஓட்டுநர் உரிமங்களில் 18 சதவீதமாகும்.
2022-ம் ஆண்டுடன் (240 உரிமங்கள்) ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டில் பெண்களுக்கு வழங்கப்பட்ட வணிக விமான ஓட்டுநர் உரிமங்களின் எண்ணிக்கை (294 உரிமங்கள்) 22 சதவீதம் அதிகரித்துள்ளது
தற்போது, பல்வேறு இந்திய பட்டியலிடப்பட்ட, பட்டியலிடப்படாத விமான நிறுவனங்களில் பணிபுரியும் மொத்த பெண் விமானிகளின் எண்ணிக்கை, மொத்த விமான ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 14 சதவீதமாக உள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் நாட்டில் ஆண், பெண் விமானிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
பிராந்திய இணைப்புத் திட்டமான உடான் கீழ் 519 வழித்தடங்கள்
பிராந்திய இணைப்புத் திட்டமான உடான் தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தம் 519 வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
தற்போது உடான் திட்டத்தின் கீழ் 2 நீர் விமானப் போக்குவரத்து நிலையங்கள் மற்றும் 9 ஹெலிகாப்டர் இயக்கு தளங்கள் உட்பட 76 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. உடான் பிராந்திய இணைப்புத் திட்ட விமானங்களை இயக்க 4 விமான நிலையங்கள் தயாராக உள்ளன. 09 ஹெலிகாப்டர் / விமான நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்து, அனுமதி அளிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. உடான் திட்டத்தின் கீழ் 17 விமான / ஹெலிகாப்டர் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள விமான நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகள் திட்டமிடல் நிலையில் உள்ளன.
ஜெட் ஏர்வேஸ், ஜூம் ஏர், ட்ரூஜெட், டெக்கான் ஏர், ஏர் ஒடிசா போன்ற சில விமான நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், அதிக பராமரிப்பு செலவுகள், பயிற்சி பெற்ற விமானிகள் குறைவு, நாட்டில் பராமரிப்பு, பழுது மற்றும் மறுசீரமைப்பு வசதிகள் இன்மையாலும், தற்போது 2 நீர் விமான நிலையங்கள் உட்பட 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக செயல்படாமல் உள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu