அக்னிபத் திட்டத்தில் விமானப்படையில் சேர்வதற்கு அப்ளிகேஷன் போட்டு காத்திருக்கும் 2.72 லட்சம் பேர்..!

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் (கோப்பு படம்)
அக்னிபத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் பெற்றார். இதைத்தொடர்ந்து, தரைப்படை, விமானப்படை, கப்பல் படை என முப்படைகளுக்கும், நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. நான்கு ஆண்டுகள் முடிவில் அக்னி வீரருக்கு 12 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஓய்வூதியம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பும் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளுக்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் தனித்தனியாக வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 'பணியில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்' என, விமானப் படை தரப்பில் முதற்கட்ட அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், கடந்த ஏழு நாட்களில், அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியில் சேர இதுவரை 2 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu