நீங்கள் பிளஸ்-2 முடித்தவரா? இந்திய கடற்படையில் 2,500 வேலைவாய்ப்பு

இந்திய கடற்படையில் 2500 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பிளஸ் 2 முடித்த திருமணமாகாத ஆண் இளைஞர்களிடம் இருந்து இதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கடற்படை ஆள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏ.ஏ என்ற பிரிவில் 500 பணியிடங்களும், எஸ்.எஸ்.ஆர். பிரிவில் 2000 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான ஆண் விண்ணப்ப பதிவு வருகிற 29ம் தேதி தொடங்குகிறது. விண்ணப்ப பதிவிற்கான கடைசி தேதி வருகிற ஏப்ரல் 5ம் தேதி ஆகும். வயது வரம்பு 17 முதல் 20 வரை ஆகும். அதாவது விண்ணப்ப தாரர்கள் 1-8-2002ல் இருந்து 31-7-2005க்குள் பிறந்திருக்கவேண்டும்.ஏஏ பணியிடத்திற்கு இந்திய கல்வி அமைச்சகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி கல்வி வாரியங்களில் கணிதம். இயற்பியல் பாடப்பிரிவை எடுத்து படித்து பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். கணிதம், இயற்பியலில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும்.அத்துடன் வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் பாடங்களை படித்தவராகவும் இருக்கவேண்டும்.
எஸ்எஸ்ஆர் பணியிடத்திற்கு 60 சதவீதம் மதிப்பெண்கட்டாயம் இல்லை. பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல் பாட பிரிவுகளை எடுத்து படித்திருந்தால் போதும். அதனுடன் வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் பாடங்களையும் படித்திருக்கவேண்டும்.
தேர்வுகள் எழுத்து தேர்வு, உடல் தகுதி பரிசோதனை, மருத்துவ பரிசோதனை என்ற அடிப்படையில் இருக்கும். எழுத்து தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருக்கும். வருகிற மே அல்லது ஜூன் மாதம் எழுத்து தேர்வு நடைபெறும். இரண்டு தேர்வுகளுக்குமே ஒரே எழுத்து தேர்வுதான்.
ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், பொது அறிவு, ஆகிய 4 பிரிவுகளிலும் தலா 25 மதிப்பெண் என்ற அடிப்படையில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இருக்கும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.60 மற்றும்.ஜி.எஸ்.டி. கட்டணம் ஆகும்.
இணையதள முகவரி
www.joinindianarmy.gov.in
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu