25 விமான நிலையங்கள் 2025ம் ஆண்டு வரை குத்தகை

25 விமான நிலையங்கள் 2025ம் ஆண்டு வரை குத்தகை
X

பைல் படம்.

25 விமான நிலையங்கள் 2025ம் ஆண்டு வரை குத்தகைக்கு விட்டு இந்திய விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

25 விமான நிலையங்கள் 2025ம் ஆண்டு வரை குத்தகைக்கு விட்டு இந்திய விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வாரணாசி, அமிர்தசரஸ், ஜோத்பூர், ராஞ்சி, சூரத், வதோதரா, போபால், ஹூப்ளி, இம்ப்பால், பாட்னா, திருச்சி. கோவை, மதுரை, சென்னை, திருப்பதி, விஜயவாடா உட்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை 2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரை, இந்திய விமான நிலைய ஆணையம் குத்தகைக்கு விட்டுள்ளது. இதே போல் பின்வரும் 8 விமான நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பொது - தனியார் பங்களிப்புடன் (பிபிபி) மேம்பாட்டு மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (டிஐஏஎல்), சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம் மும்பை (எம்ஐஏஎல்), சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம், லக்னோ (எல்ஐஏஎல்), சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், அகமதாபாத் (ஏஐஏஎல்), மங்களூரு சர்வதேச விமான நிலையம், (எம்ஏஐஏஎல்), ஜோத்பூர் சர்வதேச விமான நிலையம், (ஜேஐஏஎல்), லோக்ப்ரியா கோபிநாத் போடோலோய் சர்வதேச விமான நிலையம், குவஹாத்தி (ஜிஐஏஎல்), திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் குவஹாத்தி (டிஐஏஎல்) ஆகிய விமான நிலையங்களின் மேலாண்மை மற்றும் பராமரிப்புப் பணிகளில் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் ஈட்டும் வருவாயை, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு சார்பில் கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 பசுமை விமான நிலையங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 10-வது பசுமை விமான நிலையம் கோவா மாநிலத்தில் 11.12.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 7 பசுமை விமான நிலையங்கள் குறிப்பாக சிக்கிம் மாநிலத்தின் பக்யாங்க், கேரளாவின் கண்ணூர், கர்நாடகாவின் கல்புர்கி, மகாராஷ்ட்ராவின் சிந்து துர்க், உத்தரப்பிரதேசத்தின் குஷி நகர், ஆந்திரப்பிரதேசத்தின் ஒர்வகல் மற்றும் அருணாசலப்பிரதேசத்தின் டோன்யி- போலோ விமான நிலையங்கள் ஆகிய பசுமை விமான நிலையங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்திய விமான நிலைய ஆணையம், விமான நிலையங்களை தரம் உயர்த்தும் பணிகளை தேவைப்படும் காலங்களில் மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்துத் தேவை, நிலம், வணிக ரீதியிலான பயன்பாடு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலமான 2018-19-ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டான 2017-18-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது விமானப் பயணிகளின் எண்ணிக்கை 11.6 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் குறைந்த போதிலும், அதன் பிறகு 2021-22-ஆம் ஆண்டில் அதற்கு முந்தைய 2020-21-ஐக் காட்டிலும் 63.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil