நான்கு மணி நேர விழாவிற்கு 23 கோடி செலவு
பிரதமர் நரேந்திர மோடி
ம.பி பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் ஜன்ஜாதியா கவுரவ் திவஸின் ஒரு பகுதியாக, நவம்பர் 15 முதல் 22 வரை தேசிய அளவில் ஒரு வார நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அடுத்த வாரம் போபாலுக்கு வருகிறார். போபாலில் பிரதமர் நான்கு மணி நேரமும், மேடையில் 1 மணி நேரம் 15 நிமிடங்களும் இருப்பார். இந்த நிகழ்ச்சிக்காக மாநில அரசு 23 கோடிக்கு மேல் செலவிடுகிறது , இதில் 13 கோடி ஜம்போரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மக்களை அழைத்துச் செல்ல மட்டுமே செலவிடப்படுகிறது.
52 மாவட்டங்கள் இருந்து வரும் மக்களின் உறைவிடம், போக்குவரத்து, உணவு ஆகியவற்றுக்கு 13 கோடியும், மேடை, அலங்காரம் மற்றும் விளம்பரம் ஆகியவற்றிற்கு 9 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது..
ஜம்போரி மைதானத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து இரண்டு லட்சம் பழங்குடியினர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த இடம் முழுவதும் பழங்குடியினரின் கலை மற்றும் பழங்குடி புராணங்களின் படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இப்பணியில் ஒரு வாரமாக 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழங்குடியினருக்காக பெரிய பந்தல்களும் கட்டப்பட்டுள்ளன.
மேலும் நகரத்தில் உள்ள ஜம்பூரி மைதானத்தில் நாட்டின் முதல் பொதுத்துறை-தனியார் பங்களிப்பின் மூலம் கட்டப்பட்ட ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்தை திறந்து வைக்கிறார்.
ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் PPP திட்டத்தின் கீழ் சுமார் 450 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் ரயில் நிலையத்தை போல கட்டப்பட்டுள்ளது.
போபால் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட பாஜகவின் பல தலைவர்கள் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாலும், மாநில அரசு கோண்ட் ஆட்சியாளர் ராணி கமலாபதியின் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu