மோர்பி பால விபத்து: விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

மோர்பி பால விபத்து: விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
X
மோர்பியில் உள்ள தொங்கு பாலத்தில் கிட்டத்தட்ட பாதி கம்பிகள் துருப்பிடித்திருந்ததை சிறப்பு புலனாய்வுக் குழு தனது முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளது

குஜராத் மாநிலத்தில் மோர்பி தொங்கு பாலத்தில் நேரிட்ட விபத்து தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் பல அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோர்பியில் மச்சு நதியின் குறுக்கே ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம், முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கியது. இந்த பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக் 26 திறக்கப்பட்டது. அக் 30 அன்று பாலத்தில் சும்மார்250 போ் நின்றிருந்த நிலையில், பாலம் அறுந்து விழுந்ததில் 135 போ் உயிரிழந்தனா்.

நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில், ஒரேவா குழுமத்தின் 2 மேலாளா்கள், 2 டிக்கெட் பதிவு ஊழியா்கள், பாலத்தை பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்ட 2 துணை ஒப்பந்ததாரா்கள், 3 பாதுகாவலா்கள் என பலர் கைது செய்யப்பட்டனர்


இது குறித்து விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழு, அளித்த அறிக்கையில், மோர்பி பால விபத்தில் நாட்டின் பல ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலத்தின் நிலையை மேம்படுத்துவதிலும், அதில் வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மிக மோசமான கவனக்குறைவு இருந்துள்ளதாக சுட்டிக்காட்தியுள்ளது.

மேலும், தொங்கு பாலத்தை தாங்கிக் கொண்டிருந்த 49 இரும்புக் கயிறுகளில் கிட்டத்தட்ட 22 கயிறுகள் பாலம் அறுந்து விழுவதற்கு முன்பே பாதி அறுந்த நிலையில்தான் இருந்திருக்கிறது. சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வு செய்த போது இதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. மீதமிருந்த 27 இரும்புக்கயிறுகள்தான் விபத்தின்போது அறுந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

பாலத்தை மீண்டும் திறப்பதற்குமுன், நகராட்சி அதிகாரிகள் நகராட்சிக் கூட்டத்தைக் கூட்டி, பாலத்தை திறப்பது குறித்து ஆலோசித்து ஒப்புதல் அளிக்கத் தவறியிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாலத்தில் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்தவும், பாலத்தை திறக்கவும், அதனை மேம்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனம் நகராட்சியிடம் அனுமதி கோரவேயில்லை. நகராட்சியும் பாலத்தின் திறப்பு குறித்து எந்த அனுமதியும் வழங்கவில்லை. இரு தரப்பினருமே மிக மோசமான கவனக்குறையுடன் இருந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களால் பயன்படுத்தப்படும் எந்தவொரு கட்டமைப்பையும், "திறமையான அதிகாரி" அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பாலத்தை அணுகும் நபர்களின் எண்ணிக்கையில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தில் கட்டுப்பாடற்ற இயக்கத்திற்கு வழிவகுக்கும் டிக்கெட் விற்பனைக்கு எந்த தடையும் இல்லை.

அதுமட்டுமின்றி, பொதுமக்கள் பாலத்தை சேதப்படுத்துவதைத் தடுக்க போதிய பாதுகாப்பு இல்லாதது, (பாலம் இடிந்து விழுவதற்கு முன்பு ஒரு சில இளைஞர்கள் வேண்டுமென்றே கேபிள் பாலத்தை நகர்த்துவது, இடிந்த பிறகு வெளிவந்த வீடியோவில் காணப்பட்டது) சுட்டிக்காட்டப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி