மலப்புரம் படகு விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

மலப்புரம் படகு விபத்து: உயிரிழந்தவர்கள்  எண்ணிக்கை 22 ஆக உயர்வு
X

தானூர் படகு விபத்தில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

படகு விபத்தில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளாவை உலுக்கிய இந்த விபத்துக்கு அதிகப்படியான பயணிகளை ஏற்றி சென்றதே காரணம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று விடுமுறை என்பதால் பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். மேலும் அங்கு கடலில் படகு சவாரி செல்ல சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் குறைந்த நபர்கள் செல்ல வேண்டிய படகில், அதிகமான நபர்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.

நேற்று மாலையில் 2 அடுக்கு கொண்ட சுற்றுலா படகில் அதிகமான சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்றனர். 20 பேர் செல்லக்கூடிய படகில் 40 பயணிகள் பயணித்துள்ளனர்.

அந்த படகு கரையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் கடலில் தத்தளித்தபடி அங்கும் இங்குமாக ஆடியது.

இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

படகு உரிமையாளர் மீது அப்பகுதி மக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்ட படகு மாற்றப்பட்டு சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், படகில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தானூரைச் சேர்ந்த படகு உரிமையாளர் நாசர் என்பவர் மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். படகு பயணம் விதிமுறைகளை மீறி உள்ளதாக காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். படகு உரிமையாளர் மீன்பிடி படகை சுற்றுலா சேவைக்காக மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுற்றுலாப் படகுகளுக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ் இல்லாமல் படகு இயக்கப்பட்டதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

படகு விபத்தில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil