குஜராத்தில் மின்னல் தாக்கியதில் 20 பேர் உயிரிழப்பு

குஜராத்தில்  மின்னல் தாக்கியதில் 20 பேர் உயிரிழப்பு
X

மின்னல் - கோப்புப்படம் 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உள்ளூர் நிர்வாகம் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழைக்கு பிறகு மின்னல் தாக்கி பல பகுதிகளில் பயிர்கள் சேதமடைந்தது. மேலும் மின்னல் தாக்கியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உள்ளூர் நிர்வாகம் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

"குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மோசமான வானிலை மற்றும் மின்னல் காரணமாக பலர் இறந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த சோகத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளூர் நிர்வாகம் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்" என்று அமித் ஷா குஜராத்தியில் X இல் பதிவிட்டுள்ளார்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) அறிக்கைபடி, தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை திங்கள்கிழமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

குஜராத்தின் 252 தாலுகாக்களில் 234 தாலுகாக்களில் ஞாயிற்றுக்கிழமை மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக மாநில அவசரநிலை செயல்பாட்டு மையத்தின் (SEOC) தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரத், சுரேந்திரநகர், கெடா, தபி, பருச் மற்றும் அம்ரேலி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக 16 மணி நேரத்தில் 50 முதல் 117 மிமீ வரையிலான கனமழை பெய்தது.

வடகிழக்கு அரபிக்கடலில் ஒரு புயல் சுழற்சி நிலைபெற்றுள்ளதாகவும், சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் அதன் தாக்கம் இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai automation in agriculture