இந்தியாவிலும் பரவியது ஒமிக்ரான்: பெங்களூருவில் இருவருக்கு தொற்று

இந்தியாவிலும் பரவியது ஒமிக்ரான்: பெங்களூருவில் இருவருக்கு தொற்று
X
பெங்களூருவுக்கு வந்த இருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 2 பேருக்கு, ஒமிக்ரான் தொற்று அறிகுறி இருப்பது, முதல்கட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒமிக்ரான் அறிகுறி கண்டறிப்பட்ட இருவரும் முறையே 66 மற்றும் 44 வயதுள்ள ஆண்கள் என்றும், இவர்கள் இருவரும் நேற்றிரவு பெங்களூரு வந்ததாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அந்த இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியும்பணி நடப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

உலகில் இதுவரை 29, நாடுகளில் 373, பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், இந்தியாவும் இடம் பெற்றிருப்பது, கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

Tags

Next Story