இந்தியாவில் புதிதாக 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,132 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,563 பேர். சிகிச்சை பலனின்றி 193 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் கேரளாவில் மட்டுமே 10,691 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 பேராகப் பதிவாகியுள்ளன.

நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2,27,347 பேர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,32,93,478 பேர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,50,782 பேராக உள்ளது.

மொத்த தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 95,19,84,373 பேர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!