தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை
X
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்

சத்தீஸ்கர் மாநிலம், காங்கெர் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் மாவோஸ்ட்டுகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டின்போது எல்லை பாதுகாப்பு படையினர் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சத்தீஸ்கர் காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் கூட்டுக் குழுவிற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் கான்கெர் மாவட்டத்தின் சோட்டபெத்தியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப் பகுதிகளில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. மாவோஸ்ட்டுகளிடம் இருந்து நான்கு ஏ.கே.47 ரக துப்பாக்கிகளையும் இதர பயங்கரமான ஆயுதங்களையும் எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மாதத்தில் நடைபெற்ற இதேபோன்ற துப்பாக்கிச் சூட்டில் மவோயிஸ்ட்டுகள் தரப்பில் இருந்து ஒருவரும் பாதுகாப்பு படையினர் தரப்பில் இருந்து ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து பயங்கரமான குறிப்பாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் கைப்பற்றினர்.

கடந்த ஆண்டு நவம்பரில், மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த போது, ​​கான்கெர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. ஒருகட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிகளை வீசிவிட்டு ஓடியதால், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிகளை மட்டும் கைப்பற்றினர்.

அதேபோல், வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள பண்டாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அதிகாரிகளை மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட முயற்சி செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்