பிம் கிசான் திட்டத்தில் 15வது தவணை: பிரதமர் நாளை விடுவிப்பு
பைல் படம்.
ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் உள்ள பிர்சா கல்லூரியில், நாளை 'பழங்குடியினர் கவுரவ தினம்' கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பிரதமர் கிசான் திட்டத்தின் 15வது தவணையை விடுவிக்கிறார்.
கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், தேசிய பெருமை, வீரம், விருந்தோம்பல் போன்ற இந்திய மதிப்புகளை மேம்படுத்துவதிலும் பழங்குடியினரின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் 'பழங்குடியினர் கௌரவ தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வை நாடு முழுவதும் உள்ள வேளாண் அறிவியல் மையங்கள் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் நிறுவனங்கள், மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், பிரதமரின் வேளாண் வள மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் (சி.எஸ்.சி) ஒளிபரப்புகின்றன.
15-வது தவணையாக, 8.0 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் 15.11.2023 அன்று பிரதமரால் விடுவிக்கப்பட உள்ள ரூ.18,000 கோடிக்கும் அதிகமான தொகையைப் பெறுவார்கள். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து பயனாளிகளுக்கு மாற்றப்பட்ட மொத்த தொகை ரூ.2.80 லட்சம் கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி உதவி விவசாயிகளின் விவசாய மற்றும் பிற தற்செயல் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்.
பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதி (பி.எம்-கிசான்) என்பது உலகின் மிகப்பெரிய நேரடி பணப்பரிமாற்ற திட்டங்களில் ஒன்றாகும். இந்திய அரசின் முன்னோடித் திட்டமான இது, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் உற்பத்தித்திறன் மிக்க விவசாயத் துறைக்கான கொள்கை நடவடிக்கைகளைத் தொடங்குவதில் இந்திய அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை மூன்று சம தவணைகளில் நேரடி பணப்பரிமாற்ற முறையில் செலுத்தப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu