/* */

ஆசியாவிலேயே மிகப்பெரிய விமானக் கண்காட்சி: பிரதமர் பங்கேற்று துவக்கம்

பெங்களூரு யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் 14-வது ஏரோ இந்தியா 2023-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஆசியாவிலேயே மிகப்பெரிய விமானக் கண்காட்சி: பிரதமர் பங்கேற்று துவக்கம்
X

பெங்களூரு யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் 14-வது ஏரோ இந்தியா 2023-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 

பெங்களூரு யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் 14-வது ஏரோ இந்தியா 2023-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிலான இந்த கண்காட்சியில் 80-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. மேலும் 800 பாதுகாப்பு நிறுவனங்கள், சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700 இந்திய நிறுவனங்கள் உட்பட. ‘மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்’ என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, உள்நாட்டு உபகரணங்கள்/தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துதல், வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டுறவை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தும்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், புதிய இந்தியாவின் திறன்களுக்கு பெங்களூரு சாட்சியாக உள்ளது என்றார். இந்த புதிய உயரம்தான் புதிய இந்தியாவின் உண்மை நிலையாக உள்ளது. இன்று இந்தியா புதிய உயரங்களைத் தொட்டு, அவற்றையும் தாண்டி வருகிறது என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களுக்கு ஏரோ இந்தியா 2023 ஒரு சிறந்த உதாரணம் என்றும், இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்வது முழு உலகமும் இந்தியாவின் மீது காட்டும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் கூறினார். உலகின் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இந்திய எம்எஸ்எம்இக்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். ஏரோ இந்தியா 2023 இன் கருப்பொருள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், 'ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை', தற்சார்பு இந்தியாவின் வலிமை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே செல்கிறது என்று தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு மற்றும் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளின் வட்டமேசை அமர்வு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், இந்தத் துறையின் துடிப்பான பங்கேற்புகள் இந்தியாவின் விமானத்துறை திறன்களை மேலும் வலுப்படுத்தும் என்றார்.

இந்தியத் தொழில்நுட்ப மேம்பாட்டின் மையமாகத் திகழும் கர்நாடகாவில், ஏரோ இந்தியா கண்காட்சி நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். இது விமானத்துறையில் கர்நாடக இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை திறக்கும் என்று அவர் கூறினார். நாட்டை வலுப்படுத்தும் நோக்கில், தங்களது தொழில் நுட்பத் திறன்களைப் பாதுகாப்புத் துறையில் ஈடுபடுத்த வேண்டும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

மாறி வரும் புதிய இந்தியாவின் அணுகுமுறையை பிரிதிபலிக்கின்ற ஏரோ இந்தியா 2023 பற்றி சிறப்பாக எடுத்துரைத்தப் பிரதமர்,“புதிய சிந்தனையோடும், புதிய அணுகுமுறையோடும் நாடு முன்னேறும் போது, அதன் நடைமுறைகளும் அதற்கேற்ப புதிய சிந்தனைக்கான மாற்றத்தைத் தொடங்கவேண்டும்“ என்றார். ஏரோ இந்தியா முன்பு வெறும் காட்சியாகவும், இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கான வழியாகவும் மட்டும் இருந்ததை நினைவுகூர்ந்த பிரதமர், இப்போது அந்தக் கண்ணோட்டம் மாறியிருக்கிறது என்றார்.

தனது திறன்களை வெளிக்கொண்டு வருவதில், இந்தியா வெற்றிபெற்றிருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். சூரத்திலும் துமாக்கூருவிலும் உள்ள தேஜஸ், ஐஎன்எஸ் விக்ரந்த் மற்றும் நவீன உற்பத்தி வசதிகள் பற்றி எடுத்துரைத்த பிரதமர், இவை தற்சார்பு இந்தியாவின் ஆற்றலாகவும், உலகின் புதிய மாற்று மற்றும் வாய்ப்புகளோடு இணைந்ததாகவும் இருக்கின்றன என்றார்.

சீர்திருத்தங்களின் உதவியுடன் அனைத்து துறைகளிலும் கொண்டுவரப்பட்டுள்ள புரட்சி பற்றி எடுத்துரைத்த அவர், “21ம் நூற்றாண்டின் புதிய இந்தியா எந்த வாய்ப்பையும் தவறவிட்டதும் இல்லை, முயற்சியில் பின்தங்கியதும் இல்லை” என்றார். பல தசாப்தங்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்வதாக இருந்த நாடு இன்று உலகின் 75 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது என்பதை அவர் கோடிட்டு காட்டினார்.

கடந்த 8-9 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், 2024-25க்குள் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதிகளை 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதை 5 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளது என்றார். இதில் நமது தனியார் துறை மற்றும் முதலீட்டாளர்கள் பெரும் பங்கு வகிப்பார்கள் என்று அவர் கூறினார். இந்தியாவிலும், வெளிநாடுகள் பலவற்றிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்யுமாறு தனியார் துறையினருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

“இன்றைய இந்தியா வேகமாக சிந்திக்கிறது, தொலைநோக்குப் பார்வையுடன் விரைவான முடிவுகளை எடுக்கிறது”, என்று அமிர்த காலத்தில் இந்தியாவின் செயல்பாடுடன் போர் விமானியை ஒப்பிட்டு பிரதமர் மோடி தெரிவித்தார். தயக்கம் ஏதும் இல்லாமல், புதிய உச்சத்தைத் தொடுவதற்கு மிகவும் ஆவலோடு இருக்கும் நாடு, இந்தியா என்றார் அவர். எத்தனை உயரத்தில், எவ்வளவு வேகத்தில் பறந்தாலும் இந்தியா வேரூன்றியிருப்பதை அவர் வலியுறுத்தினார்.

“சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகிய இந்தியாவின் செய்தியை ஏரோ இந்தியா எதிரொலிக்கிறது”, என்று பிரதமர் குறிப்பிட்டார். எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களை ஒட்டுமொத்த உலகமும் எதிர்நோக்குகிறது என்று கூறிய அவர், இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச முதலீடுகளுக்கு உகந்த சூழலியலை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணற்ற நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தார். பாதுகாப்பு மற்றும் இதர துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை சுட்டிக் காட்டிய பிரதமர், தொழில்துறைகளுக்கான உரிமங்களை வழங்குவதற்கான நடைமுறையை எளிதாக்கிய அதே வேளையில், அவற்றின் கால அளவை நீட்டித்தது குறித்தும் கூறினார். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் உற்பத்தி ஆலைகளுக்கான வரி சலுகைகள் மேம்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தேவை, நிபுணத்துவம் மற்றும் அனுபவம் ஏற்படும் இடங்களில் எல்லாம் தொழில் வளர்ச்சி என்பது இயற்கையானது என்று பிரதமர் குறிப்பிட்டார். துறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேலும் ஆற்றல் பெறும் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அவர் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 13 Feb 2023 3:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்