திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மணி நேரத்தில் ரூ.13 கோடி வருமானம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மணி நேரத்தில் ரூ.13 கோடி வருமானம்
X

பைல் படம்.

இன்று காலை 10 மணிக்கு மார்ச் மாதம் வழிபடுவதற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைனில் வெளியிட்டது.

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி திருமலையில் எழுந்தருளியுள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு விஐபி தரிசனம், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசனம் என பல்வேறு வகையான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

இதில் ஒவ்வொரு மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தானத்தின் இணையதளத்தில் முந்தைய மாதமே வெளியிடப்படுவது வழக்கம். இதை அனைத்தும் ஆன்லைன் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

அந்த வகையில் இன்று காலை 10 மணிக்கு மார்ச் மாதம் வழிபடுவதற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைனில் வெளியிட்டது. இதனை பக்தர்கள் போட்டி போட்டு கொண்டு ஒரே மணி நேரத்தில் மொத்த டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்து முடித்தனர். இதனால் தேவஸ்தானத்திற்கு ஒரே மணி நேரத்தில் 13 கோடியே 38 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. ஒரே மணி நேரத்தில் விற்று தீர்ந்த மொத்த டிக்கெட்களின் எண்ணிக்கை 4,46,000 என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story