தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.127.31 கோடி நிதி

தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.127.31 கோடி நிதி
X
காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பசுமையை அதிகரிக்க 2021-22 ஆம் ஆண்டு வரை ரூ.113.42 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே கூறியதாவது:

பருவநிலை மாற்றத்துக்கான தேசிய செயல்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் 8 திட்டங்களில் பசுமை இந்தியா தேசியத் திட்டமும் ஒன்று. நாட்டில் வனப்பகுதியை அதிகரிப்பதையும் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பசுமை இந்தியா திட்டத்தின் கீழ், தமிழக அரசிடமிருந்து எந்தத் திட்டத்தையும், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பெறவில்லை. ஆனாலும் தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 2000-01 ஆண்டிலிருந்து தமிழகத்துக்கு ரூ.127.31 கோடி வாங்கப்பட்டுள்ளது. காடு வளர்ப்பு, மேலாண்மை, இழப்பீடு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பசுமையை அதிகரிக்க 2021-22 ஆம் ஆண்டு வரை ரூ.113.42 கோடி வழங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
the future of ai in healthcare