ரயில்வேயின் பல்வேறு கண்டுபிடிப்பு சவால்களில் பங்கேற்க 1251 நிறுவனங்கள் பதிவு

ரயில்வேயின் பல்வேறு கண்டுபிடிப்பு சவால்களில் பங்கேற்க 1251 நிறுவனங்கள் பதிவு
X
பல்வேறு கண்டுபிடிப்பு சவால்களில் பங்கேற்க இந்திய ரயில்வேயின் வலைதளத்தில் மொத்தம் 1251 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

இந்திய ரயில்வேயின் "ரயில்வேக்கான ஸ்டார்ட்அப்கள்" முன்முயற்சி வேகம் பெற்றுள்ளது.

பல்வேறு கண்டுபிடிப்பு சவால்களில் பங்கேற்க இந்திய ரயில்வேயின் வலைதளத்தில் மொத்தம் 1251 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 23 திட்டங்களின் மதிப்பு ரூ.43.87 கோடி ஆகும்.

ஸ்டார்ட் அப்கள் எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் பங்கேற்பின் மூலம் புத்தாக்கத் துறையில் இந்திய ரயில்வே ஒரு முக்கியமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. "ரயில்வேக்கான புத்தொழில் நிறுவனங்கள்" முன்முயற்சி 13.06.2022 அன்று ரயில்வே அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய ரயில்வே, https://innovation.indianrailways.gov.in/ என்ற புத்தாக்க வலைதளத்தை தொடங்கியது.

இந்திய ரயில்வேயில் செயல்பாட்டுத் திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய ஸ்டார்ட்அப்கள் / எம்.எஸ்.எம்.இ / கண்டுபிடிப்பாளர்கள்/ தொழில்முனைவோர் உருவாக்கிய புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்திய ரயில்வேயின் தரம், நம்பகத்தன்மை மற்றும் பராமரிப்பு தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதை ரயில்வே அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கொள்கையின் கீழ், ஸ்டார்ட்அப்/ எம்.எஸ்.எம்.இ/ கண்டுபிடிப்பாளர் / தொழில்முனைவோர் திட்டத்தில் உருவாக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமைகளின் பிரத்யேக உரிமையைக் கொண்டிருப்பார்கள்.

புத்தாக்க வலைதளத்தில் பதிவு செய்துள்ள 1251 நிறுவனங்களின் விவரம்:

புத்தொழில் நிறுவனங்கள்- 248

தனிப்பட்ட கண்டுபிடிப்பாளர்கள்- 671

எம்எஸ்எம்இ-க்கள்-142

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் / பிற நிறுவனங்கள்-58

உரிமையாளர் / கூட்டாண்மை நிறுவனங்கள்/ எல்.எல்.பி / கூட்டு முயற்சி நிறுவனங்கள் / கூட்டமைப்பு -47

என்.ஜி.ஓக்கள்-19

மற்றவை-66

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்