கட்சி மாறிய எம்எல்ஏக்கள்: ஷாக்கான காங்கிரஸ்

கட்சி மாறிய எம்எல்ஏக்கள்: ஷாக்கான காங்கிரஸ்
X

முகுல் சங்மா

மேகாலயாவில் 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12 பேர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேகாலயாவில் உள்ள 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12 பேர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால், மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் மாறியுள்ளது

கட்சி மாறிய தலைவர்களில் முன்னாள் முதல்வர் முகுல் சங்மாவும் அடங்குவர். சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான சங்மா, காங்கிரஸ் மேலிடத் தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு மேகாலயா தேர்தலை கருத்தில் கொண்டு, திரிணாமுல் காங்கிரஸ் பலத்தை சோதிக்க தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் குழு உறுப்பினர்கள் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2012 ஆம் ஆண்டில், மேகாலயா பிரதேச மாநிலத்தின் 60 இடங்களில் 35 இடங்களில் போட்டியிடும் நோக்கத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் மேகாலயாவில் கால் பதித்துள்ளது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!