இந்தியாவில் ஒமிக்ரான் 'சதம்': டெல்லியில் ஒரேநாளில் 10 பேருக்கு தொற்று
கொரோனா தொற்றின் உருமாறிய வைரஸான ஒமிக்ரான், உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் இதுவரை, 91 நாடுகளில் பரவி உள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் கடந்த சில தினங்களில் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது.
ஒமிக்ரான் வைரஸ், இந்தியாவிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவில் 11 மாநிலங்களில் 101 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 32, டெல்லி 22, ராஜஸ்தானில் 17, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் தலா 8 என்று, ஒமிக்ரான் பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 10 பேருக்கு புதியதாக கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் மேலும் கூறுகையில், தென்னாப்பிரிக்காவில் டெல்டாவை விட ஒமிக்ரான் வேகமாக பரவுகிறது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. சமூக பரவல் ஏற்பட்டால் டெல்டா பரவலை ஒமிக்ரான் பரவல் மிஞ்சும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி செயல்படாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu