நேஷனல் டாக்டர்ஸ் டே

நேஷனல் டாக்டர்ஸ் டே
X

டாக்டர் பிதான் சந்திர ராய்

இந்தியாவின் பெருமைக்குரிய மருத்துவ மேதை டாக்டர் பிதான் சந்திர ராய். மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சைக்கான படிப்புகளை ஒரே நேரத்தில் படித்தவர்.

உலகில் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் நபர் ஒருவர் உண்டு என்றால், அவர் மருத்துவராகத்தான் இருப்பார்கள். அவர்களைப் போற்றி பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் மருத்துவர்கள் தினம் (Doctor's Day) கொண்டாடப்படுகிறது.

உலகின் பல நாடுகளிலும் மருத்துவர்கள் தினம் வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து அனுசரிக்கப்படுது. மருத்துவத்தில் சிறந்து விளங்கும் கியூபா, கரோனா நெருக்கடி காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மருத்துவர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது. கியூபாவில் மருத்துவரும் விஞ்ஞானியுமான கார்லோஸ் ஜுவான் ஃபின்லே பிறந்த தினமான டிசம்பர் 3 அன்று மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1886-ம் ஆண்டிலேயே மஞ்சள் காய்ச்சல் கொசு மூலம் பரவுகிறது என்பதைக் கண்டுபிடித்தவர் இவர். நம்ம நாட்டை பொறுத்தவரையில் 1991-ம் ஆண்டிலிருந்து ஜூலை முதல் நாளை தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். மருத்துவர்களின் முக்கியத்துவம், பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மருத்துவத் தொழிலை மேம்படுத்தவும் இந்த நாளைப் பயன்படுத்துகிறார்கள்.

அதற்குக் காரணமானவர் -டாக்டர் பிதான் சந்திர ராய். பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ல பாங்கிபோர் என்ற ஊரில் 1882, ஜூலை 1-ம் தேதி பிறந்தவர் பிதான் சந்திரா ராய் (Dr. Bidhan Chandra Roy). ஏழைகள் மேல் மிகவும் அன்பு கொண்ட பி.சி.ராய், மருத்துவப் பணிக்கே தன்னை அர்ப்பணித்தவர்.

இந்தியாவின் பெருமைக்குரிய மருத்துவ மேதை. மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சைக்கான படிப்புகளை ஒரே நேரத்தில் படித்தவர். இவர் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு நெருக்கமானவாராக இருந்தவர். காந்தியுடன் இணைந்து நாட்டு விடுதலைக்காகவும் போராடியதோடு மட்டுமல்லாது, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் இருந்தார்.

அத்துடன் மேற்கு வங்க மாநிலத்தின் முதல் அமைச்சராகவும் பொறுப்பு வகித்து மக்கள் சேவையாற்றினார்.தன் வீட்டையே ஏழைகளுக்கான மருத்துவமனை கட்ட கொடுத்த டாக்டர் பி.சி.ராய், முதல் அமைச்சராக இருந்த காலத்தில்கூட ஏழைகளுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்தவர்.

இவரது சேவைகளைப் பாராட்டி, 1961-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை செய்பவர்களுக்கு 1976-ம் ஆண்டு முதல் டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவர், தான் பிறந்த தேதியான (1962-ம் ஆண்டு) ஜூலை 1-ம் தேதியிலே மரணம் அடைந்தார்.

அப்பேர்பட்ட ராயின் பிறந்த நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!