மேற்குவங்கத்திற்கு ஏன் 8 கட்ட தேர்தல்? மம்தா கேள்வி

மேற்குவங்கத்திற்கு ஏன் 8 கட்ட தேர்தல்? மம்தா கேள்வி
X

பிற மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் மேற்கு வங்கத்திற்கு மட்டும் எதற்காக 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என மம்தா பானர்ஜி விமர்சனம் எழுப்பியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் நேற்று அறிவித்தார். இதில் மேற்குவங்க மாநிலத்திற்கு முதற்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27 ம் தேதி, 2ம் கட்டம் ஏப்ரல் 1ம் தேதி, 3ம் கட்டம் ஏப்ரல் 6ம் தேதி, 4ம் கட்டம் ஏப்ரல் 10, 5ம் கட்டம் ஏப்ரல் 17, 6ம் கட்டம் ஏப்ரல் 22, 7ம் கட்டம் ஏப்ரல் 26, இறுதி கட்டம் ஏப்ரல் 29 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் ஆலோசனையின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.மேலும் பிற மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த முடியும் போது மேற்குவங்கத்தில் மட்டும் எதற்காக 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது? என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil