மாநிலங்களவை பிப்ரவரி 8 ம் தேதி வரை ஒத்திவைப்பு

மாநிலங்களவை பிப்ரவரி 8 ம் தேதி வரை ஒத்திவைப்பு
X

மாநிலங்களவை வரும் (பிப்.8) காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையாநாயுடு உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை காலை முதல் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் இன்று காலை வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் உத்தரவிட்டிருந்தனர்.இந்நிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடிய நிலையில் மீண்டும் திங்கள்கிழமை(பிப்.8) காலை 9 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!