ஒற்றுமை சிலைக்கு 8 புதிய ரயில்கள், நாளை துவக்கம்

ஒற்றுமை சிலைக்கு 8 புதிய ரயில்கள், நாளை துவக்கம்
X

நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஒற்றுமை சிலைக்கு 8 புதிய ரயில்களை நாளை (ஜனவரி 17ம் தேதி) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

நாட்டின் பல பகுதிகளிலிருந்து குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஒற்றுமை சிலைக்கு 8 ரயில்களை நாளை காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த ரயில்கள் ஒற்றுமை சிலைக்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்கும்.

மேலும் குஜராத்தில் தபோய் - சந்தோத் அகல ரயில் பாதை, சந்தோத் -கெவாடியா புதிய அகல ரயில் பாதை, பிரதாப் நகர் - கெவாடியா மின்மயமாக்கப்பட்ட புதிய வழித்தடம், தபோய், சந்தோத் மற்றும் கெவாடியா பகுதியில் புதிய ரயில் நிலைய கட்டிடங்கள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். பசுமை சான்றிதழ் பெற்ற நாட்டின் முதல் ரயில் நிலைய கட்டிடம் கெவாடியா என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!