பிற நாட்டு சிறைகளில் 7,139 இந்தியர்கள்-அமைச்சர் பதில்

பிற நாட்டு சிறைகளில் 7,139 இந்தியர்கள்-அமைச்சர் பதில்
X

பிற நாடுகளின் சிறைகளில் இந்தியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் கூறியதாவது: நமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் பல்வேறு நாடுகளின் சிறைகளில் 7,139 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.இதில் சவுதி அரேபியா சிறைகளில் 1,599 இந்தியர்கள் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 898, நேபாளத்தில் 886, மலேசியாவில் 548, குவைத்தில் 536 என்ற எண்ணிக்கையில் இந்தியக் கைதிகள் உள்ளனர். இவ்வாறு இணையமைச்சர் முரளிதரன் கூறினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!