கொரோனாவை தடுக்க 7 தடுப்பூசிகள்- ஹர்ஷ்வர்த்தன்

கொரோனாவை தடுக்க 7 தடுப்பூசிகள்- ஹர்ஷ்வர்த்தன்
X

கொரோனா வைரஸுக்கு எதிராக மேலும் 7 தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்தார்.

கொல்கத்தாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனாவிற்கு எதிராக தற்போது 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதற்காக மேலும் 7 தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த 7 தடுப்பூசிகளில் 3 தடுப்பூசிகள் பரிசோதனை நிலையில் இருக்கின்றன. 2 தடுப்பூசிகள் கிளினிக்கல் பரிசோதனைக்கு முந்தையக் கட்டத்திலும், ஒரு தடுப்பூசி முதல் கட்ட களினிக்கல் பரிசோதனையிலும், 2-வது தடுப்பூசி 2-வது கட்டத்திலும் உள்ளன. இவ்வாறு ஹர்ஸவர்த்தன் தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!