பெங்களூரு: கார் பார்க்கிங் வருடத்திற்கு ரூ.5000 கட்டணம்

பெங்களூரு: கார் பார்க்கிங் வருடத்திற்கு ரூ.5000 கட்டணம்
X
வருடத்திற்கு ரூ.5000 கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் மட்டுமே இனிமேல்பெங்களூரில் காரை வீட்டுக்கு முன்பு தெருவில் பார்க் செய்து கொள்ள முடியும்.

பெங்களூரு நகரத்தில் கார் பார்க்கிங் செய்வது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பலருக்கும் தலைவலிதான். பலரும் வீடுகளுக்கு உள்ளே ஒரு காரும், வெளியே தெருவில் ஒரு காருமாக பார்க் செய்திருப்பார்கள். கார் பார்க்கிங் இல்லாத வீடுகளிலும் கூட கார் இருக்கும் என்பதால் தெருக்களில், பிளாட்பாரங்களில் வீடுகளுக்கு முன்பு கார் பார்க்கிங் செய்வது அங்கு அதிகமாகவே இருக்கிறது.

இதைக் கட்டுப்படுத்த தற்போது கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது நகர்ப்புற வளர்ச்சித்துறை. அதன்படி வீடுகளுக்கு முன்பு கார் நிறுத்துவதாக இருந்தால் வருடத்திற்கு ரூ.5000 கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் மட்டுமே இனிமேல் காரை வீட்டுக்கு முன்பு தெருவில் பார்க் செய்து கொள்ளமுடியும். இதுதொடர்பான ஆலோசனை 2012ம் ஆண்டே தொடங்கி விட்டது . ஆனால் தற்போதுதான் அமலுக்கு வந்துள்ளது.

-மைக்கேல்ராஜ்.

Next Story
ai in future agriculture