இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.5 கோடி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.5 கோடி அறிவிப்பு
X

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதற்கு பிசிசிஐ பரிசுத் தொகையாக ரூ. 5 கோடி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி இந்திய அணியைப் பாராட்டியது மட்டுமல்லாமல் மெகா பரிசுத் தொகையாக ரூ.5 கோடி அறிவித்துள்ளார். கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மாபெரும் டெஸ்ட் தொடர் வெற்றிகளில் இதுவும் ஒன்று. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். ஆஸ்திரேலிய அணியும் சிறப்பாக விளையாடியது. இது அற்புதமான டெஸ்ட் தொடர் எனத் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த போட்டியில் தமிழகவீரர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture