கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ஒதுக்கீடு

கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசி வருகிறார். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எந்த மாதிரியான அறிவிப்புகள் வெளியாகும், சிறப்புப் பொருளாதாரச் சலுகை எதுவும் அறிவிக்கப்படுமா, வருமான வரியில் தளர்வுகள் கிடைக்குமா போன்ற எதிர்பார்ப்புகள் நாட்டு மக்கள் மத்தியில் உள்ளன.

இந்நிலையில் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய சிறப்பம்சங்களாக, உள் கட்டமைப்பு வசதிக்கு 20,000 கோடி, நகர்ப்புற தூய்மை திட்டம் 1.41 லட்சம் கோடி, கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் விரைவில் ஒதுக்கப்படும். நகர்ப்புறங்களில் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும்.

பட்ஜெட் 6 தூண்களை உள்ளடக்கியது. பழைய வாகனங்களை அழிக்க புதிய திட்டம் ஏற்படுத்தப்படும். மிகவும் இக்கட்டான சூழலில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. உலகப் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவுகிறது என மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story